Technical Civil In Tamil

Creating awareness about building construction through this Blog and You tube(Technical Civil In Tamil).


Construction general tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Construction general tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 அக்டோபர், 2025

கட்டடங்களுக்கு உண்டாகும் மழைக்கால நோய்கள்

 கட்டடங்களுக்கு  உண்டாகும் மழைக்கால நோய்கள்

கட்டிடப் பராமரிப்பு: மழைக்காலத்தில் வீட்டைப் பாதுகாக்கும் வழிகள்

மழைக்காலம் இந்த முறை வழக்கத்தை விட நீடித்துவிட்டதால், தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழையும் வெள்ளமும் நம் வீடுகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தன. இத்தகைய சூழலில், நம் வீடுகளைப் பராமரிப்பது மிகவும் அவசியம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வண்ணம் பூசுதல், இரும்புக் கம்பிகள் துருப்பிடிக்காமல் இருக்க பெயிண்ட் அடித்தல் ஆகியவை அடிப்படைப் பராமரிப்புப் பணிகளாகும். கட்டுமானத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றை உடனுக்குடன் சரிசெய்தால், கட்டிடம் அழகாகவும் நீடித்து நிலைக்கும். இது கட்டிடத்தின் ஆயுளையும் அதிகரிக்கும்.

சென்னை பொதுப்பணித் துறை கட்டிடம் 150 ஆண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. ரிப்பன் கட்டிடம் போன்றவையும் நல்ல பராமரிப்பால் நேர்த்தியாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றன. நட்சத்திர ஹோட்டல்கள், மருத்துவமனைகள் போன்ற பல கட்டிடங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல தனியார் கட்டிடங்களும் கூட நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கின்றன.

ஆனால், பல தனியார் வீடுகள் சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை. உரிமையாளர்கள் செலவு செய்யத் தயங்குவதே இதற்குக் காரணம். "பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று சொல்லி அவர்கள் இதைப் பொருட்படுத்துவதில்லை. சன் ஷேடுகள் துருப்பிடித்து விழும் நிலையில் இருந்தாலும், கழிப்பறையில் நீர்க்கசிவு ஏற்பட்டு சுவர்களின் வண்ணப் பூச்சு உதிர்ந்தாலும், செங்கல் கட்டுமானம் வெளியே தெரிந்தாலும், அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகிறார்கள்.

அவர்களுக்குப் பராமரிப்புப் பணிகள் செய்யாமல் இருந்தால், "பணம் யார் தருவது?" என்று நம்மைப் போன்ற பொறியாளர்களைக் கேட்பார்கள். அவர்கள் வீடு நீடித்து நிலைக்க வேண்டுமானால், அவர்கள்தான் செலவு செய்ய வேண்டும். பல லட்சங்கள், கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடத்தைப் பராமரிப்பதற்குத் தயங்குவது தேவையற்ற செலவு என்ற தவறான மனநிலைதான் மக்களிடையே உள்ளது.

கட்டிட உரிமையாளருக்கு ஏற்ற வகையில், குறைந்த செலவில் நீடித்து நிலைக்கக்கூடிய கட்டிடத்தைப் பெற சில ஆலோசனைகளை இங்கே தருகிறேன்:

கட்டிடப் பராமரிப்பு தேவைப்படும் இடங்கள்:

  1. மொட்டைமாடி
  2. கழிப்பறை
  3. சமையலறை
  4. தரை (Flooring)
  5. வெளிப்புற & உட்புறச் சுவர்கள்

இந்த இடங்களை முறையாகப் பராமரித்து, இங்கு ஏற்படும் கட்டிடப் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்தால், 50% பராமரிப்புப் பணி முடிந்துவிடும். கட்டிடத்தின் ஆயுளும் நீடிக்கும்.

மழை மற்றும் வெயிலால் வெளிப்புறச் சுவர்களில் உள்ள வண்ணப் பூச்சுகள் நிறம் மங்கி, ஆங்காங்கே கருப்புத் திட்டுகள் தோன்றி, கட்டிடம் பழையது போல் காட்சியளிக்கும்.
ஐந்து, ஏழு அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அவசியம் வண்ணம் பூசி, கட்டிடத்தைப் பராமரித்து, புதுப்பொலிவுடன் வாழ்நாளை அதிகரிக்கலாம்.

தற்காலத்தில், மழைநீர் செங்கல் கட்டிடத்திற்குள் புகாத வகையில் வெளிப்புற வண்ணப் பூச்சுகள் கிடைக்கின்றன. இந்தப் பெயிண்ட்டைப் பயன்படுத்தினால் கட்டுமானம் பாதிக்கப்படாது. மழைநீரால் செங்கல் கட்டிடத்திற்குள் ஈரம் சென்றால், செங்கற்கள் ஈரமாகி வலுவிழக்கும். மேலும், பச்சை நிறக் காளான் ஏற்பட்டு, வெயில் பட்டவுடன் கருப்பு நிறமாக மாறிவிடும். நீங்கள் உங்கள் கட்டிடத்தின் வெளித்தோற்றத்தைப் பார்வையிட்டு, அதன் நிலையை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

செலவில்லாத பராமரிப்புகள்:

மொட்டைமாடியைச் சுத்தமாக வைத்திருங்கள். அதாவது, மழைநீர் செல்லும் குழாய்களில் உள்ள இலைகள், குப்பைகளை அகற்றி, மழைக்காலங்களில் மழைநீர் சரியாகத் மொட்டைமாடி தளத்திலிருந்து தரைக்குச் செல்கிறதா என்று பார்க்க வேண்டும். மழைநீர் குழாய்களில் உள்ள அடைப்புகளைக் கம்பி, குச்சிகளைக் கொண்டு சுத்தம் செய்தால், 50% மொட்டைமாடி காப்பாற்றப்படும்.

எனது 25 வருட அனுபவத்தில், நிறைய கட்டிடங்களின் பாதிப்புகள் கீழ்க்கண்ட காரணங்களால் தான் ஏற்படுகின்றன என்று அறிந்துள்ளேன்:

  1. மொட்டைமாடி தளத்தில் மழைநீர் தேங்கி நிற்பது மற்றும் மழைநீர் குழாய்களின் அடைப்பு.
  2. மொட்டைமாடி தளத்தைச் சுத்தமாக வைக்காமல், மழைநீர் சரியாக வெளியேற வழி செய்யாமல் இருப்பது.
  3. உடைந்த / கரைந்த டைல்ஸ்களை அகற்றிவிட்டு புதிய டைல்ஸ்களைப் போட்டு, இணைப்புகளைக் (Joints) கோம்பினேஷன் மோர்டார் 1:3 ஆல் நிரப்ப வேண்டும். பிற இணைப்புகளையும் சரிசெய்து, மழைநீர் மொட்டைமாடியில் தேங்காமல் செய்ய வேண்டும்.

இணைப்புகளுக்கு 'டைல் கிரௌட்' எனப்படும் ரெடிமேட் பவுடர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
மழை பொழியும் போது மொட்டைமாடிக்குச் சென்று தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாமல் போனால், மழைநீர் தேங்கி நின்று 'வெதரிங் கோர்ஸ்'ஸில் உள்ள சிறிய துவாரங்கள் வழியாக RCC ஸ்லாப்க்குச் சென்று, அதிலுள்ள சிறிய துவாரங்கள் வழியே சென்று இரும்புக் கம்பிகளைத் துருப்பிடிக்கச் செய்து, பிறகு கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட்டுவிடும்.

அதன் பின், முதலில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து கான்கிரீட் கீழே விழுந்து, இரும்புக் கம்பிகளின் விட்டம் (8 மிமீ அளவு கம்பி 3 மிமீ விட்டமாக) துருப்பிடித்ததினால் குறைந்து, RCC ஸ்லாப் வலுவிழந்து உடைந்து விழ வாய்ப்புள்ளது. விரிசல்கள் உண்டாகி மழைநீர் வீட்டிற்குள் வருவது, சுவர்கள் ஈரமாக இருப்பது, இரும்புக் கம்பிகள் கான்கிரீட்டை விட்டு வெளியே தெரிவது எல்லாம், "என்னை (கட்டிடம்) கவனித்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுங்கள்" என்று அதற்குத் தெரிந்த மொழியில் கட்டிடம் கூறுகிறது என்று உணருங்கள்.

 

காற்றை வடிகட்ட ஒரு கட்டடம்


 


காற்றை வடிகட்ட ஒரு கட்டடம்

சீனாவின் ஷியான் மாகாணத்தில், 100 மீட்டர் உயரமுள்ள ஒரு பெரிய காற்று சுத்திகரிப்பு கோபுரம் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது "சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு கோபுரம்" அல்லது "ஏர் ஃபில்டர் டவர்" என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கோபுரம் ஒரு மாபெரும் காற்று வடிகட்டி போல செயல்படுகிறது. சுற்றியுள்ள காற்றை உறிஞ்சி, அதில் உள்ள தூசி, நச்சுப் பொருட்கள் மற்றும் அசுத்தங்களை நீக்கி, சுத்தமான காற்றை வெளியேற்றுகிறது. ஷியான் மாகாண நிர்வாகம் மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டு இந்தக் கட்டுமானத்தை நிறைவு செய்துள்ளது.

ஏறத்தாழ 10 கி.மீ. சுற்றளவுள்ள காற்றை சுத்தப்படுத்தும் திறன் கொண்ட இந்தக் கோபுரத்தை 'க்ரீன் ஹவுஸ்' என்றும் அழைக்கின்றனர். இதை வடிவமைத்து நிறுவிய காஜிஞ்சி நிறுவனம், 100 மீட்டர் உயரமுள்ள ஏர் பில்டர் டவர் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் 300 மீட்டர் உயரமுள்ள மற்றொரு கோபுரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இது 30 சதுர கி.மீ. சுற்றளவில் உள்ள காற்று மாசுகளை சுத்தப்படுத்தும். ஒரு சிறிய நகரத்திற்கு இது போதுமானது என்றும், பெரிய நகரங்களுக்கு வெவ்வேறு இடங்களில் 3 அல்லது 4 கோபுரங்களை நிறுவலாம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.


                    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
, இதே நிறுவனம் 'சிட்டி ட்ரீ' என்ற பெயரில் 4 மீட்டர் உயரமுள்ள ஏர் பில்டரை வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சோதனை முயற்சியாக நிறுவி வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

ஷியான் மாகாணத்திற்குப் பிறகு, சீனாவின் பிற மாகாணங்களிலும் இதுபோன்ற காற்று வடிகட்டி கோபுரங்களை வரிசையாக நிறுவ திட்டமிட்டுள்ளனர். இந்த முயற்சி நல்ல பலனை அளித்தால், உலகெங்கிலும் உள்ள பெரிய நகரங்களில், குறிப்பாக ஆசிய நகரங்களில், இத்தகைய காற்று வடிகட்டி கோபுரங்கள் கட்டப்படலாம். இந்தியாவில், டெல்லி போன்ற நகரங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

செவ்வாய், 21 டிசம்பர், 2021

Split Level Concept for small houses


    நில அளவு மிக சிறியதாக உள்ள போது ஒரு சில சூழ்நிலைகளில் மாடிக்கு செல்வதற்கு படிக்கட்டு அமைக்க முடியாமல் போகலாம். அவ்வாறு உள்ள சூழ்நிலையில் முதல் மாடிக்கான உயரத்தை அடைய படிக்கட்டை பல்வேறு நிலைகளாக பிரித்து கட்டலாம் அவ்வாறு பல்வேறு நிலைகளாக பிரிக்கும் முறை தான் Split Level. 
    நம் மேற்பார்வையில் Split Level Concept இல் கட்டப்பட்டுள்ள ஒரு இல்லத்தின் வரைபடம் மற்றும் அந்த கட்டிடத்தின் வீடியோவை இங்கே கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.



 

Building construction contracts under square feet rate basis - Advantages & Disadvantages. சதுர அடிக்கு விலை பேசி வீடு கட்ட விடுவதால் ஏற்படும் சங்கடங்கள்

     நமது வீடு கட்டுவதற்கு மொத்த காண்ட்ராக்ட் விடும்போது சதுர ஆடி  விலையில் பேசி விடுவது பெரும்பாலான இடங்களில் நடைமுறையில் உள்ளது. இப்படி சதுர அடிக்கு பேசி வீடு கட்ட விடுவதால் ஒரு சில இடங்களில் ஒரு சில சங்கடங்களும் கண்டிப்பாக நாம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

                    1. சதுர அடிக்கு பேசி விடுவதால் நாம் ஏதாவது நமது வரைபடத்தில் ஒரு சிறு மாற்றங்கள் செத்தால் கூட அதற்கான பண மதிப்பை நம்மால்

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

Points to be noted for preparing 2D plan for your home construction. உங்கள் வீட்டின் கட்டிட வரைபடம் வரைவதற்கு முன் மனதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

 வீடு கட்ட முடிவு செய்த பின் வீட்டிற்கான வரைபடம் வரைய ஒரு என்ஜினீயரை அணுகும் முன் நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்.

1. நில அளவுகள் (Land size in all direction)

2. பிரதான கதவின் நுழைவு திசை (Main door opening direction)

Don't start your Construction work without these 5 things | Construction Planning documents needed


                நாம் வீடு கட்டலாம் என்று முடிவு செய்து விட்டால் கண்டிபாக ஒரு சில ஆவணங்கள் நம் வீடு கட்டுவதற்கு தேவைப்படும். இந்த ஆவணங்களை ஒரு நன்கு அனுபவம் வாய்ந்த,