காற்றை வடிகட்ட ஒரு கட்டடம்
சீனாவின்
ஷியான் மாகாணத்தில், 100 மீட்டர்
உயரமுள்ள ஒரு பெரிய காற்று சுத்திகரிப்பு கோபுரம் வெற்றிகரமாக கட்டி
முடிக்கப்பட்டுள்ளது. இது "சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு கோபுரம்" அல்லது
"ஏர் ஃபில்டர் டவர்" என்று அழைக்கப்படுகிறது.
இந்தக்
கோபுரம் ஒரு மாபெரும் காற்று வடிகட்டி போல செயல்படுகிறது. சுற்றியுள்ள காற்றை
உறிஞ்சி, அதில்
உள்ள தூசி, நச்சுப்
பொருட்கள் மற்றும் அசுத்தங்களை நீக்கி, சுத்தமான காற்றை
வெளியேற்றுகிறது. ஷியான் மாகாண நிர்வாகம் மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டு இந்தக்
கட்டுமானத்தை நிறைவு செய்துள்ளது.
ஏறத்தாழ 10 கி.மீ. சுற்றளவுள்ள காற்றை
சுத்தப்படுத்தும் திறன் கொண்ட இந்தக் கோபுரத்தை 'க்ரீன் ஹவுஸ்' என்றும் அழைக்கின்றனர். இதை
வடிவமைத்து நிறுவிய காஜிஞ்சி நிறுவனம், 100 மீட்டர் உயரமுள்ள ஏர் பில்டர்
டவர் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் 300 மீட்டர் உயரமுள்ள மற்றொரு
கோபுரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இது 30 சதுர கி.மீ. சுற்றளவில் உள்ள
காற்று மாசுகளை சுத்தப்படுத்தும். ஒரு சிறிய நகரத்திற்கு இது போதுமானது என்றும், பெரிய நகரங்களுக்கு வெவ்வேறு
இடங்களில் 3 அல்லது 4 கோபுரங்களை நிறுவலாம் என்றும்
நிறுவனம் கூறியுள்ளது.
இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு, இதே
நிறுவனம் 'சிட்டி
ட்ரீ' என்ற
பெயரில் 4 மீட்டர்
உயரமுள்ள ஏர் பில்டரை வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சோதனை
முயற்சியாக நிறுவி வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
ஷியான்
மாகாணத்திற்குப் பிறகு, சீனாவின்
பிற மாகாணங்களிலும் இதுபோன்ற காற்று வடிகட்டி கோபுரங்களை வரிசையாக நிறுவ
திட்டமிட்டுள்ளனர். இந்த முயற்சி நல்ல பலனை அளித்தால், உலகெங்கிலும் உள்ள பெரிய
நகரங்களில், குறிப்பாக
ஆசிய நகரங்களில், இத்தகைய
காற்று வடிகட்டி கோபுரங்கள் கட்டப்படலாம். இந்தியாவில், டெல்லி போன்ற நகரங்களுக்கு இது
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக