Creating awareness about building construction through this Blog and You tube(Technical Civil In Tamil).


Wednesday, December 22, 2021

Estimation of Tile quantity for 10' x 12' room. How many sq ft tile required? வீட்டிற்கு தேவையான Tile மற்றும் அதன் செலவு கணக்கிடும் எளிய முறை

ஒரு வீட்டிற்கு Tile எவ்வளவு தேவைப்படும் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை தெரிந்து கொள்ளும் எளிய கணக்கு

இதற்கு நாம் ஒரு சிறிய 12' x 10' (உள்) அளவு உள்ள அறையை எடுத்துக்கொள்வோம்.

தற்போது அறையின் மொத்த பரப்பளவு = 12' x 10' = 120 சதுர அடி.

மேலும் நாம் சுவர் மற்றும் தரை சந்திக்கும் (Skirting ) பகுதியிலும் tile ஓட்டுவோம் எனவே அதன் பரப்பளவு =

அறையின் சுற்றளவு = (2 x 12') + (2 x 10') = 44'

Skirting உயரம் = 4" = 4/12 = 0.333'

Skirting போட கூடிய பரப்பளவு = 44' x 0.333' = 14.52 சதுர அடி

Tile போடக்கூடிய மொத்த பரப்பளவு = 120' + 14.52' = 134.52 சதுர அடி

தோராயமாக 150 சதுர அடி என வைத்துக்கொள்வோம். எனவே மொத்தமாக 150 சதுர அடி அளவுக்கு tile வாங்க வேண்டும்.

தற்போது கலவை எவ்வளவு தேவைப்படும் என்று பாப்போம். கலவை கனம் 2" என வைத்துக்கொள்வோம்

கலவையின் மொத்த கொள்ளளவு = 150 x (2"/12) = 25 கன அடி

சிமெண்ட் மற்றும் மணலின் கலவை விகிதம் 1:6 என வைத்துக்கொள்வோம்

மணல் அளவு = (6/7) x 25 x 1.33 =  28.5 = 29 கன அடி

சிமெண்ட் அளவு = (1/7) x (25/35.29) x 1.33 x (1440/50) = 3.87 bags

தோராயமாக 4 மூட்டை சிமெண்ட் என்று வைத்து கொள்ளலாம்.

மேலே உள்ள அளவுகளுக்கு உங்கள் பகுதியில் உள்ள விலை ஒப்பிட்டு நீங்களே தெரிந்து கொள்ளலாம்

 

பொருள்

அளவு

தொகை

மொத்த தொகை

Tile

150  சதுர அடி

 

 

சிமெண்ட்

4 bag

 

 

மணல்

25 கன அடி

 

 

Joint Filler

1

 

 

ஆள் கூலி

150  சதுர அடி

 

 

இந்த தகவலை காணொளி வாயிலாக பெற


 

No comments:

Post a Comment