Creating awareness about building construction through this Blog and You tube(Technical Civil In Tamil).


Tuesday, December 21, 2021

Building construction contracts under square feet rate basis - Advantages & Disadvantages. சதுர அடிக்கு விலை பேசி வீடு கட்ட விடுவதால் ஏற்படும் சங்கடங்கள்

     நமது வீடு கட்டுவதற்கு மொத்த காண்ட்ராக்ட் விடும்போது சதுர ஆடி  விலையில் பேசி விடுவது பெரும்பாலான இடங்களில் நடைமுறையில் உள்ளது. இப்படி சதுர அடிக்கு பேசி வீடு கட்ட விடுவதால் ஒரு சில இடங்களில் ஒரு சில சங்கடங்களும் கண்டிப்பாக நாம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

                    1. சதுர அடிக்கு பேசி விடுவதால் நாம் ஏதாவது நமது வரைபடத்தில் ஒரு சிறு மாற்றங்கள் செத்தால் கூட அதற்கான பண மதிப்பை நம்மால்

யூகிக்க முடியாமல் போகலாம். ஒரு சுவர் புதிதாக கட்ட சொல்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த மாற்றத்திற்கான கூலியை அந்த ஒரு சில காண்ட்ராக்டர் ஆல்  துல்லியமாக கணக்கிட முடியாமல் போகலாம் .எனவே உங்களிடம் மொத்தமாக ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ஆகிவிட்டது என்று கூறலாம். இதுவே item wise estimate போட்டு வேலை செய்யும்போது ஒவொரு விதமான வேலைக்கும் இவ்வ்ளவு பணம் ஆகும் என்று முன்னாலேயே உங்களிடம் சொல்லி விடுவார்கள். எனவே எவ்வளவு வேலை நடனது உள்ளது என நீங்களே பார்த்து அதற்கான பணத்தை குடுக்கலாம். (எ. கா,. கட்டு வேளைக்கு இவ்வளவு ருபாய், பூச்சு வேலைக்கு இவ்வளவு ருபாய் என்று வரைமுறை படுத்தி விடவேண்டும் )

                     2. மேலும் இப்படி சதுர ஆடி விலை பேசி விடுவதால் இருவரில் ஒருவர் அதிக லாபமோ அல்லது அதிக நஷ்டமோ அடையலாம். 600 சதுர அடிக்கு ஒரு நிலம் சுற்றிலும் செங்கல் சுவர் மட்டும் கட்டப்போகிறோம் என்று வைத்து கொள்வோம். இந்த 600 சதுர ஆடி இரு வேறு நிலா அளவுகளில் நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். அதாவது 30 x 20 = 600 சதுர அடி , 24 x 25 = 600 சதுர அடி என இரு நில அளவுகள் உள்ள செங்கல் கட்டு வேலையை மட்டும் ஒப்பிட்டு பாப்போம். 30 x 20 நில அளவுள்ள இடத்திற்கு செங்கல் கட்டுவேலை மட்டும் 750 கன அடி தேவை படும், 25 x 24 நிலா அளவுள்ள இடத்திற்கு செங்கல் கட்டுவேலை மட்டும் 735 கன ஆடி தேவை படும். இரு நில அளவு உள்ள இடத்திலும் ஒரே காண்ட்ராக்டர் ஒரே சதுர அடி விலைக்கு வேலை செய்வதாக வைத்து கொள்வோம் . 30 x 20 என்ற அளவுள்ள வேலையில் கட்டு வேலை அதிகம் உள்ளது எனவே இந்த நில உரிமையாளர் லாபம் அடைகிறார். 25 x 24 என்ற அளவுள்ள வேலையில் கட்டு வேலை குறைவாக உள்ளது எனவே இதில் காண்ட்ராக்டர் லாபம் அடைகிறார். எனவே இருவருக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட வேலைக்கு குறிப்பிட்ட விலை பேசுவது மிகவும் நல்லது.

                     3. வீட்டு வேலை நடைபெறும்போது திடிரென்று கட்டுமான பொருள்களின் விலை ஏறும் பட்சத்தில் சரியான முறையில் சதுர அடி விலையை ஏற்ற முடியாமல் போகலாம், தோராயமாக மட்டுமே சதுர அடி விலையை ஏற்ற முடியும். item wise estimate போட்டு செய்யக்கூடிய கட்டிட வேளைகளில் இந்த நடைமுறை சிக்கல் கண்டிப்பாக இருக்காது


இந்த தகவலை காணொளி வாயிலாக பெற



No comments:

Post a Comment