3000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான தொங்கும் பாலம் திறப்பு
செக்
குடியரசில் புதிதாக திறக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான தொங்கு பாலம், 'ஸ்கை பிரிட்ஜ் 721' (Sky
Bridge 721) தற்போது
ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,100 மீட்டர் (3,610 அடி) உயரத்தில், 721 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது.
மவுன்டெய்ன் ரிசார்ட்டில் அமைந்துள்ள இந்தப் பாலம், போலந்து எல்லைக்கு அருகில்
இருப்பதால், அண்டை
நாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்
பாலத்தை இரண்டு ஆண்டுகளில் 8.3 மில்லியன் டாலர் செலவில் செக் குடியரசு அரசு கட்டியுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஒரே நேரத்தில் 500 பேர் மட்டுமே பாலத்தில்
அனுமதிக்கப்படுவார்கள். ஆரம்ப இரண்டு வாரங்களுக்கு 250 பேர் மட்டுமே சோதனை
அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர். காற்றின் வேகம் மணிக்கு 135 கிலோமீட்டரைத் தாண்டினால் பாலம்
மூடப்படும்.
இந்தப் பாலத்திற்கான நுழைவுக்கட்டணம் இந்திய மதிப்பில்
சுமார் 1,100 ரூபாய். உயரத்தை பார்த்து பயப்படுபவர்களுக்கு இங்கு அனுமதி
இல்லை. இந்த பாலம் செக் குடியரசின் சுற்றுலாத் துறையை கணிசமாக மேம்படுத்தும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக