Creating awareness about building construction through this Blog and You tube(Technical Civil In Tamil).


Tuesday, December 21, 2021

How many bricks required for 10' x 10' room. 10' x 10' அளவு உள்ள ஒரு அறை கட்ட எவ்வளவு செங்கல் தேவைப்படும்?

 

    இந்த கணக்கீட்டிற்காக பின் வரும் அளவுகள் உள்ள ஒரு அறையை எடுத்து கொள்வோம். வரைபடத்தை பார்க்கவும்.

அறையின் அளவு                 = 10' x 10'

கதவு அளவு                             = 3' x 7'

ஜன்னல் அளவு                       = 5' x 4'

செங்கல் அளவு                      = 9" x 4" x 3"

நீளமான சுவரின் நீளம்   = 10' x 2 = 20'

நீளம் குறைவான சுவரின் நீளம் = [10' - 2 (9") ] x 2 = 17' { இங்கு 9" என்பது சுவரின் அகலம் }

கதவின் கொள்ளளவு         = 3' x 7' x 075' = 15.75 கன அடி

ஜன்னலின் கொள்ளளவு = 5' x 4' x 0.75' = 15 கன அடி

 

நீளமான சுவரின் மொத்த கொள்ளளவு                          = 20' x 10' x 0.75' = 150 கன அடி

நீளம் குறைவான சுவரின் மொத்த கொள்ளளவு     = 17 x 10' x 0.75' = 127.5 கன அடி

செங்கல் சுவரின் மொத்த கொள்ளளவு =150 + 127.5                = 277.5 கன அடி

 

தற்போது கதவு மற்றும் ஜன்னல் வரும் இடங்களில் செங்கல் வைத்து கட்டப்போவது இல்லை எனவே நாம் கதவு மற்றும் ஜன்னல் கொள்ளளவை மொத்த கொள்ளளவில் இருந்து கழிக்க வேண்டும்.

 

செங்கல் சுவரின் கொள்ளளவு = [மொத்த கொள்ளளவு] - [கதவு மற்றும் ஜன்னல் கொள்ளளவு ]

= 277.5 கன அடி - 30.75 கன அடி

செங்கல்  மட்டும் வைக்க கூடிய சுவரின் மொத்த கொள்ளளவு = 246.75 கன அடி

ஒரு செங்கலின் கன அளவு கலவையுடன் = 9.5" x 4.5" x 3.5" = 149.625 கன அங்குலம்

= 149.625 / 1728

= 0.086589 கன அடி

 

தேவைப்படும் செங்கலின் எண்ணிக்கை = செங்கல்  மட்டும் வைக்க கூடிய சுவரின் மொத்த கொள்ளளவு / ஒரு செங்கலின் கன அளவு கலவையுடன்

 

= 246.75 / 0.086589

= 2850 nos

 

செங்கல் கழிவு வகையில் 3 % நாம் சேர்த்து கொள்ள வேண்டும் 3 % கழிவு = 86 nos

 

எனவே தேவைப்படும் மொத்த செங்கல் எண்ணிக்கை = 2936 nos 

 இந்த தகவலை காணொளி வாயிலாக பெற


 

No comments:

Post a Comment